சுடச்சுட

  

  அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

  Published on : 13th March 2019 03:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jobs_hiring


  பெங்களூரு: அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  இதுகுறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த சிசு மேம்பாட்டு திட்டம், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை சார்பில் பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் 15 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டுவருகின்றன. 

  இந்த மையங்களில் காலியாக இருக்கும் 10 அங்கன்வாடி ஊழியர்கள், 20 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  விண்ணப்பங்களை ஏப். 4-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

  மேலும் விவரங்களுக்கு சிசு மேம்பாட்டு திட்ட அதிகாரி அலுவலகம், பெங்களூரு(மாநில) திட்டம், முதல்மடை, பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு ஒன் கட்டடம், குழந்தைபேறு மருத்துவமனை அருகில், என்.ஆர்.காலனி, பெங்களூரு-19 என்ற முகவரியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai