சுடச்சுட

  

  ரயில்வேயில் அடுத்த அறிவிப்பு இது... துணை மருத்துவம் படித்தவர்களுக்கு 1937 பணியிடங்கள் அறிவிப்பு

  Published on : 14th March 2019 03:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  indian-railway

  ரயில்வேயில் தொடர்ந்து ஏராளமான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது துணை மருத்துவம் படித்தவர்களுக்கு 1937 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  மொத்தம் காலியிடங்கள்: 1937 

  பணி: DIETICIAN -  04
  பணி: STAFF NURSE -1109
  பணி: DENTAL HYGIENIST - 05
  பணி: DIALYSIS TECHNICIAN - 20
  பணி: EXTENSION EDUCATOR - 11
  பணி: HEALTH and MALARIA INSPECTOR GRADE III  - 289
  பணி: LAB SUPERINTENDENT GRADE III - 25
  பணி: OPTOMETRIST- 06
  பணி: PERFUSIONIST  - 01
  பணி: PHYSIOTHERAPIST  - 21
  பணி: PHARMACIST GRADE III  - 277
  பணி: RADIOGRAPHER  - 61
  பணி: SPEECH THERAPIST -  01
  பணி: ECG TECHNICIAN - 23
  பணி: LADY HEALTH VISITOR  -  02
  பணி: LAB ASSISTANT GRADE II 3 -  82

  இந்த பணியிடங்களில் சென்னை ரயில்வே தேர்வு வாரியத்திற்கு 173 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

  தகுதி: அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு அந்தந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

  கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

  விண்ணப்பிக்கும் முறை: சம்மந்தப்பட்ட ரயில்வே மண்ட இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rrbchennai.gov.in/downloads/cen-no-rrc01-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.04.2019

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai