சுடச்சுட

  

  ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு என்ன தெரியுமா? 

  Published on : 19th March 2019 12:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  court


  திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், மசால்சி, சுருக்கெழுத்தர் தட்டச்சர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், துப்புரவு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

  பணி: அலுவலக உதவியாளர் - 23
  பணி: இரவுக்காவலர், மசால்சி - 07
  பணி: துப்புரவு பணியாளர் - 01

  சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரை 

  பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-II - 07(தற்காலிக பணி)
  பணி: கம்பியூட்டர் ஆப்ரேட்டர் - 01

  சம்பளம்: ரூ. 20,600 முதல் ரூ. 65,500 வரை 

  தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் என அவரவர்கள் சம்மந்தப்பட்ட தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

  தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி 627 002

  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2019

  மேலும் விண்ணப்பிக்கும் முறை, கட்டண சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai