சுடச்சுட

  

  விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடற்படையில் 554 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி! 

  Published on : 14th March 2019 12:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  indian-navy

  நாட்டின் கடல்எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் இந்திய கடற்படையில் ‘குரூப் சி’ பிரிவு அலுவலக பணியிடங்களான 554 டிரேட்ஸ்மேன் மேட் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்க தவறிய தகுதியானவர்கள் உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  மொத்த காலியிடங்கள்: 554

  பணி: டிரேட்ஸ்மேன் மேட்

  வயது வரம்பு: 15.03.2019 தேதியின்படி 18 - 25 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

  தகுதி: பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்று, சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

  கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.205 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

  தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

  விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.joinindiannavy.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in அல்லது www.indiannavy.nic.in ஆகிய இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2019 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai