சுடச்சுட

  

  8 ஆம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை

  Published on : 15th March 2019 01:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bdu


  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தின ஊதியம் அடிப்படையில் நிரப்பப்பட 5 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  பணி: ஓட்டுநர் - 05

  தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்டபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  வயதுவரம்பு: 09.03.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32க்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினர்களும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

  விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 இதனை பதிவாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி என்ற பெயருக்கு காசோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்டி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

  ஓட்டுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள நபர்கள் முதலில் இப்பல்கலைக்கழகத்தில் தின ஊதிய அடிப்படையில்(நாளொன்றுக்கு ரூ.264 வீதம்) பணியமர்த்தப்பட்டு, பணி மற்றும் நடத்தைகள் திருப்திகரமாக இருப்பின் பின்னர் அப்பணியாளர்கள் இப்பல்கலைக்கழகத்தில் ஓட்டுநர் பதவியில் அப்பதவிக்குரிய ஊதியக்கட்டு மற்றும் தரஊதியத்தில் பதவியில் பணியமர்த்தப்படுவார்கள். 

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பதிவாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பல்கலைப்போரூர், திருச்சிராப்பள்ளி -620 024

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.03.2019

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bdu.ac.in/docs/employment/driver-2019/driver-appointment-2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai