Enable Javscript for better performance
விண்ணப்பித்துவிட்டீர்களா..? 5 ஆயிரம் அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!- Dinamani

சுடச்சுட

    

    விண்ணப்பித்துவிட்டீர்களா..? 5 ஆயிரம் அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

    Published on : 28th March 2019 12:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    eb

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 5 ஆயிரம் கேங்க்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்டு கடந்த 22 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துக்கள். 

    பணி: கேங்க்மேன் (பயிற்சி)

    காலியிடங்கள்: 5000

    தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-ல் (அதாவது ரூ.16,200 - 51,500) பொருத்தம் செய்யப்படும். 

    வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, இதர பிரிவினர், மி.மி.வ, சி.ம, பி.வ,பி.வ(மு) ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tangedco.gov.in என்ற வலைத்தளத்தில் அல்லது https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf?_ga=2.140189811.1307732274.1553680221-56991348.1552890850 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

    கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.04.2019

    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.04.2019 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai