முகப்பு வேலைவாய்ப்பு
விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
By | Published On : 18th May 2019 12:47 AM | Last Updated : 18th May 2019 12:47 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிபதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணி இடங்களின் எண்ணிக்கை அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளது.
கணினி இயக்குநர் (5), நகல் பரிசோதகர் (5), முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் (9), இளநிலை கட்டளை நிறைவேற்றுநர் (18), ஜெராக்ஸ் ஆபரேட்டர் (1), ஓட்டுநர் (2), அலுவலக உதவியாளர் (51), மசால்சி (10), அலுவலகக் காவலர் (20), சுகாதாரப் பணியாளர் (6), துப்புரவுப் பணியாளர் (10) ஆகிய 137 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன.
இதற்காக, தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பப் படிவம், கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை https://disricts.ecourts.gov.in/kanchipuram என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அதன்படி, விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து மாவட்ட முதன்மை நீதிபதி, காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு (இருப்பு) - 603001 என்ற முகவரிக்கு வரும் மே 31-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேருமாறு பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கவேண்டும்.