ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி வேலை: பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! 

இந்தி ராணுவத்தில் 42-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (டி.இ.எஸ்-42, ஜன 2020) பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகி
ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி வேலை: பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! 


இந்தி ராணுவத்தில் 42-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (டி.இ.எஸ்-42, ஜன 2020) பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு பிளஸ் டூ முடித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக்கின்றன. இதில் நுழைவுத் திட்டத்தின்படி சேர்பவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். 

மொத்த காலியிடங்கள்: 90 
பயிற்சி: 42-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (டி.இ.எஸ்-42, ஜன 2020)

தகுதி: இயற்பியல், வேதியியல், கணதவியல் பாடங்கள் கொண்ட பிரிவில் 70 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ (10+2 முறையில் படித்து) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 01.07.2000 மற்றும் 01.7.2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்களே.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்.எஸ்.பி நடத்தும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வானது முதல் நிலை, இரண்டாம் நிலை என இருநிலைகளில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல் தகுதி மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com