ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) செப்டம் (CEPTAM) எனும் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 351
ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை


ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) செப்டம் (CEPTAM) எனும் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 351 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

மொத்த காலியிடங்கள்: 351

பணி: டெக்னீசியன்

வயது வரம்பு: 26.06.2019 தேதியின்படி 18 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பிரிவுகளில் ஐடிஐ படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

கட்டணம்: ரூ.100. அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: கணினித் தேர்வு மற்றும் திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.drdo.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.06.2019 முதல் 26.06.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com