Enable Javscript for better performance
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?- Dinamani

சுடச்சுட

    
    iocl


    பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    மொத்த காலியிடங்கள்: 380  (தமிழ்நாட்டிற்கு 19 காலியிடங்கள்)
    பணி:    Apprentice

    காலியிடங்கள் விவரம்:
    1. Western Region Pipelines - 115
    2. Eastern Region Pipelines - 100
    3. South Eastern Region Pipelines - 50
    4. Northern Region Pipelines - 90

    5. Southern Region Pipelines
    * Tamilnadu -19
    * Karnataka    - 03
    * Andhra Pradesh - 03

    தகுதி: பிளஸ் டூ, ஐடிஐ, பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி  முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

    வயதுவரம்பு: குறைந்தபட்ச வயது 18 பூர்த்தியடைந்து 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

    விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2019

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com/download/Website%20Notification%20App%20final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai