Enable Javscript for better performance
பெல் நிறுவனத்தில் பொறியாளர் வேலை வேண்டுமா?- Dinamani

சுடச்சுட

    
    bel


    பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நாளை நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையவும்.

    பணி: Contract Engineers

    காலியிடங்கள்: 12

    சம்பளம்: மாதம் ரூ.27,000 - 30,000

    வயதுவரம்பு: 01.11.2019 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

    தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் பிரவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  Pratap World School, Defence Road, Near Mamumcantt, Village Pangoli District, Phathankot - 145001

    நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.11.2019

    விண்ணப்பிக்கும் முறை: www.bel.indian.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பயோ-டேட்டா படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். நகல் சான்றிதழ்களில் சுயசான்று செய்திருக்க வேண்டும்.

    மேலும் முழுமையான விவரங்களுக்கு www.bel.indian.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai