விண்ணப்பித்துவிட்டீர்களா..? 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை!

சென்னையில் செயல்பட்டு வரும் என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், போட் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு
விண்ணப்பித்துவிட்டீர்களா..? 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை!


சென்னையில் செயல்பட்டு வரும் என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், போட் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: தேசிய மாணவர் படை

பணியிடம்: சென்னை தேசிய மாணவர் படை அலுவலகம் 

மொத்த காலியிடங்கள்: 08 

பணி மற்றும் காலியிடங்கள் விபரம்: 
பணி: Driver  - 04 
சம்பளம்: மாதம் ரூ.19500-62000

பணி: Store Attendants - 1 
சம்பளம்: மாதம் ரூ.15900-50400

பணி: Office Assistants - 02 
பணி: Chowkidar
பணி: Boat Keeper - 01
சம்பளம்: மாதம் ரூ.15700-50000

பணி: Boat Lascasr
சம்பளம்: மாதம் ரூ.15700-50400

தகுதி: அனைத்துப் பணியிடங்களுக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கனரக, இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் ஓட்டுநர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும், எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 53க்குள்ளும், மற்ற பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 48க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://cms.tn.gov.in/sites/default/files/documents/QR_NCC_100818_0.pdf  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 13 (TN) Bn NCC, No. 161, Periyar EVR High Road, Kilpauk, Chennai -600 010. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cms.tn.gov.in/sites/default/files/documents/QR_NCC_100818_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.12.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com