குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை 6491-ல் இருந்து 9398 ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி-4-ல் (குரூப்-4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்
குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை 6491-ல் இருந்து 9398 ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


சென்னை:  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி-4-ல் (குரூப்-4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை 9 ஆயிரத்து 398 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி-4-ல் (குரூப்-4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) - 397, ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி) - 2688, பில் கலெக்டர், கிரேடு - I -34, பீல்டு சர்வேயர் - 509, டிராப்ட்ஸ்மேன்- 74, தட்டச்சர் - 1901 மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் -784 ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த நிலையில் அதற்கான தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் நவம்பர் 12 ஆம் தேதி வெளியிட்டது. 

விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. தேர்வாணையத்தின் விதிமுறைகளின்படி, 12 லட்சத்து 76 ஆயிரத்து 108 பேரின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது.

தேர்வு நடந்த நாளில் இருந்து 72 நாட்களில் தரவரிசைப்படுத்தி தேர்வு முடிவுகளை குறைவான நாட்களில் வெளியிட்டிருந்தது தேர்வாணைய வரலாற்றில் இது முதன்முறை ஆகும். இதற்கு முன்பு 105 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த எண்ணிக்கையை  அதிகரித்து  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், தொகுதி 4-ல் (குரூப் 4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை 9 ஆயிரத்து 398 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. 

அதாவது, கிராம நிா்வாக அலுவலா் பிரிவில் 607 இடங்களும், இளநிலை உதவியாளா் பிரிவில் 4 ஆயிரத்து 558 இடங்களும், தட்டச்சா் பணியில் 2,734 இடங்களும் உயா்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, குரூப் 4 தோ்வில் மொத்தமுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 398 ஆக உயா்ந்துள்ளது.

இப்போது அதிகரிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு சான்றிதழ் சரிபாா்ப்புக்காக தோ்வு செய்யப்பட்டுள்ள தகுதியானவா்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசுப் பணிகளில் இருப்பவர்களில் ஓய்வு பெறுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் மற்றும் அரசுத் தோ்வுகள் எழுதி வேறு பணிகளுக்குச் செல்லுதல் போன்ற காரணங்களால் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், காலியிடங்களும் அதிகரித்துள்ளது. இதையடுத்து விண்ணப்பித்து தோ்வெழுதி தோ்ச்சி பெற்ற பலருக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு கை கூடியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com