கிராம சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்புகள்: 1234 செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் அறிவிக்கப்பட்ட கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) 1234 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு
கிராம சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்புகள்: 1234 செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் அறிவிக்கப்பட்ட கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) 1234 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியுடைய பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

பணி: கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) 

காலியிடங்கள்: 1234

தகுதி: டிப்ளமோ நர்சிங் படிப்பு முடித்தவர்கள் இப்பணியிடத்த்குத் தகுதியுடையவர்கள் அல்ல. எஸ்.எஸ்.எல்.சி. கல்வித் தகுதியுடன், 18 மாத பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் படிப்பான எம்பிஎச்டபுள்யு முடித்தவர்கள், பிளஸ் 2 கல்வித் தகுதியுடன், 2 ஆண்டு ஏஎன்எம் எனப்படும் ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வைஃப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு: 01.07.2019-இல் அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

அரசு நிறுவனங்களான பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சியை நிறைவு செய்து வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள், தங்கள் அசல் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் தங்கள் பதிவுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வேலூர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முகசுந்தரம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com