முகப்பு வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பா?
By ஆர். வெங்கடேசன் | Published On : 07th October 2019 06:40 PM | Last Updated : 07th October 2019 09:06 PM | அ+அ அ- |

மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தொழில்பழகுநர் பயிற்சி
பயிற்சி காலம்: 1 ஆண்டு
தகுதி: இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் பொறியியல் துறையில் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கணினி அறிவியல் பிரிவில் பட்டயம் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி காலம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் www.mhrdnats.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் வரும் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை அறிய www.boat-srp.com என்னும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.