உச்ச நீதிமன்றத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 8 நீதிமன்ற உதவியாளர் (டெக்னிக்கல் உதவியாளர் மற்றும் புரோகிராமர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு
உச்ச நீதிமன்றத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 8 நீதிமன்ற உதவியாளர் (டெக்னிக்கல் உதவியாளர் மற்றும் புரோகிராமர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 08

பணியிடம்: தில்லி 

பணி: Court Assistant (Technical-cum-Programmer)

காலியிடங்கள்: 08

தகுதி: பொறியியல் துறையில் பட்டம், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் அல்லது கணினி அறிவியல் பிரிவில் பி.எஸ்சி., பிசிஏ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.44,900 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில் திறன் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://sci.gov.in/pdf/recruitment/Advt%20n%20app%20form%20tech%20post.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.10.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com