Railway Jobs: ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் ரயில்வேயில் வேலை... விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடமேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான
Railway Jobs: ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் ரயில்வேயில் வேலை... விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!


ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடமேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sports Person (Sports quota)

காலியிடங்கள்: 21

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் விளையாடி குறைந்தது மூன்றாவது இடமாவது பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் கல்வித்தகுதி, விளையாட்டு தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை North Western Railway Soprts Association, Jaipur  என்ற முகவரிக்கு வங்கி வரைவோலையாகவோ அல்லது ஐபிஓ ஆக எடுத்து செலுத்த வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை: https://nwr.indianrailways.gov.in  அல்லது www.rrcjaipur.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Asst.Personnel Officer (Rectt), Railway Recruitment Cell, North Western Railway, Jaipur - 302 006

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.10.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com