Police Jobs: காவல் துறையில் தலைமைக்காவலர் வேலை வேண்டுமா?

தில்லி காவல் துறையில் நிரப்பப்பட உள்ள 554 தலைமைக்காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
Police Jobs: காவல் துறையில் தலைமைக்காவலர் வேலை வேண்டுமா?



தில்லி காவல் துறையில் நிரப்பப்பட உள்ள 554 தலைமைக்காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 554

பணி: Head Constable
1. ஆண்கள் - 372
2. பெண்கள் - 182

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள் - உயரம் 165 செ.மீட்டரும், 76 செ.மீட்டர் மார்பளவுவும், 4 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். 
பெண்கள் - உயரம் 157 செ.மீட்டர் பெற்றிருக்க வேண்டும். உடற்திறன் குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித்தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.delhipolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.delhipolice.nic.in  அல்லது https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2019/10/15/Recruitment-Head_Constable_(Ministrial)2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.11.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com