ரூ.63,200 சம்பளத்தில் பல்கலைக்கழகத்தில் கிளார்க் வேலை வேண்டுமா?

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற "Inter
ரூ.63,200 சம்பளத்தில் பல்கலைக்கழகத்தில் கிளார்க் வேலை வேண்டுமா?


மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற "Inter University Accelerator Centre" -இல் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Multi Tasking Staff (MTS) - 03
சம்பளம்: மாதம் ரூ.18000 - 56900
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Lower Division Clerk (LDC) - 02
சம்பளம்: மாதம் ரூ.19900 - 63200
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.25500 - 81100
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும். 

பணி: Senior Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.35400 - 112400
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.iuac.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
Inter University Accelerator Centre, Aruna Asaf Ali Mark, New Delhi - 110 067

மேலும் முழுமையான விவரங்கங்கள் அறிய http://www.iuac.res.in/onlinejobs/IUACDetNotOct2019.pdf என்ற லிங்கில் சென்றஉ தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2019
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com