MFL Recruitment:  மெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

மெட்ராஸ் உர நிறுவனத்தில் காலியாக உள்ள 93 பட்டதாரி பொறியியல் பயிற்சியாளர்கள், மேலாண்மை பயிற்சியாளர்கள், தொழில்நுட்ப உதவி
MFL Recruitment:  மெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலை வேண்டுமா?



மெட்ராஸ் உர நிறுவனத்தில் காலியாக உள்ள 93 பட்டதாரி பொறியியல் பயிற்சியாளர்கள், மேலாண்மை பயிற்சியாளர்கள், தொழில்நுட்ப உதவி பயிற்சியாளர்கள், ஆய்வக ஆய்வாளர் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாக பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து  ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

மொத்த காலியிடங்கள்: 93

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பட்டதாரி பொறியியல் பயிற்சியாளர்கள் மற்றும் மேலாண்மை பயிற்சியாளர்கள்: 
1. Production - 01 - 13 
2. Chemist - 02
3. Marketing - 07
4. Safety - 01
5. Personnel -  01
6. Commercial & MM - 05 
7. Analyst Programmer - 01
8. Finance & Accounts  - 01

தொழில்நுட்ப உதவி பயிற்சியாளர்கள் மற்றும் ஆய்வக ஆய்வாளர் பயிற்சியாளர்கள்: 
1. Operations - 27 
2. Lab Analyst - 02
3. Mechanical - 10
4. Electrical - 04 
5. Instrumentation - 04 
6. Civil - 01

நிர்வாக பணியாளர்கள்
1. Accountant - 01
2. Jr. Asst. Comml. & MM - 05 
3. Jr. Marketing Asst - 07
4. Jr. Personnel Asst - 01

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, எச்ஆர்எம், சமூக சேவை, பொது நிர்வாகவியல், எம்சிஏ, எம்,எஸ்சி., எம்.காம், சிஏ, வேதியியல் துறையில் பி.எஸ்சி., பி.காம் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 25 - 28 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசுவிதிகளின் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு தொழில்நுட்ப உதவி பயிற்சியாளர்கள் மற்றும் ஆய்வக ஆய்வாளர் பயிற்சியாளர்கள், நிர்வாக பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.300, பட்டதாரி பொறியியல் பயிற்சியாளர்கள் மற்றும் மேலாண்மை பயிற்சியாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.madrasfert.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://govtjobsdrive.in/wp-content/uploads/2019/09/Click-Here-for-MFL-GET-MT-TAT-Syllabus-PDF-Download.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com