குரூப் 2: முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற புதிய நடைமுறை: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப் 2 போட்டித் தேர்வில், முதன்மைத் தேர்வுக்கான தேர்ச்சி நடைமுறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார்
டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி


குரூப் 2 போட்டித் தேர்வில், முதன்மைத் தேர்வுக்கான தேர்ச்சி நடைமுறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் திங்கள்கிழமை வெளியிட்டார். 
முதனிலைத்தேர்வு: முதனிலைத்தேர்வுக்கு  ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. தமிழகத்தின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழுள்ள அலகுகள் -8, 9 ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.
மாத இறுதியில் வெளியீடு: தேர்வர்களின் தகவலுக்காகவும், அவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும் முதனிலைத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இந்த மாத இறுதியில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வுக்கு தயாராவதற்கு தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும்.
முதன்மை எழுத்துத் தேர்வு: முந்தைய மாற்றத்தின்படி, முதன்மைத் தேர்வானது ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இரண்டு தேர்வுகள் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எற்கனவே அறிவிக்கப்பட்ட முதன்மை எழுத்துத்தேர்வின் பகுதி-அ (டஹழ்ற்-அ) மட்டும் தனித்தாளாக, தகுதித்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. 
அதாவது தமிழில் இருந்து ஆங்கிலம், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் ஆகியவற்றில் மொழிபெயர்ப்பு செய்யும் பகுதியானது 100 அதிகபட்ச மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக நடைபெறும். இந்தத் தேர்வில் தகுதிபெற 25 மதிப்பெண்கள் அவசியம் பெற வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற்றால் மட்டுமே இரண்டாவது தாள் மதிப்பீடு செய்யப்படும்.
தகுதித் தேர்வு தரம் மாற்றம்: தகுதித்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்வரின் தரவரிசை நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. தமிழக கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இத்தேர்வுக்கு  நிர்ணயிக்கப்பட்டிருந்த தரம் பட்டப் படிப்பிலிருந்து பத்தாம் வகுப்பு தரத்துக்கு இப்போது மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ் மொழியில் எழுத, படிக்கத் தெரிந்த மாணவர்களால் மட்டுமே இத்தேர்வில் தேர்ச்சி பெறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புப் பகுதியைத் தவிர்த்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் 
இரண்டாவது தாள் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. முன்னர் 200 மதிப்பெண் கொண்ட தேர்வானது இப்போது 300 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக 3 மணி நேரம் நடைபெறும். விண்ணப்பதாரர் இத்தாளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
முதனிலைத் தேர்விலும் முதன்மை எழுத்துத் தேர்விலும் வெற்றிபெற வேண்டுமாயின் தேர்வர்கள் தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூகப் பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என  அதில்  தெரிவித்துள்ளார்.
குரூப் 2 தேர்வு நடைமுறையில் மாற்றம் ஏன்? 
குருப் 2 தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது. 
இதுகுறித்து, அதன் செயலாளர் க.நந்தகுமார் வெளியிட்ட விளக்கம்: அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொழி அறிவுத்திறன், கோப்புகள் வரைவுத் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் தேர்வாணையத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கைகள்  வைக்கப்பட்டன. அதன் அடிப்படையிலேயே, தீவிரமாக விவாதித்து குரூப் 2 தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியன பல்வேறு துறைத் தலைவர்கள், தமிழ் பேராசிரியர்கள் கொண்ட வல்லுநர் குழுவின் பரிந்துரையின்படி, அரசுத்துறைகளின் தேவைகளையும் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டன. பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர் என  தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com