ரூ.42 ஆயிரம் சம்பளத்தில் இந்திய மத்திய வங்கியில் வேலை வேண்டுமா? 

இந்திய அரசுக்கு சொந்தமான தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றானது இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல்
ரூ.42 ஆயிரம் சம்பளத்தில் இந்திய மத்திய வங்கியில் வேலை வேண்டுமா? 


இந்திய அரசுக்கு சொந்தமான தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றானது இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இந்தியாவின், பொருளாதார தலைநகரும், மகாராஷ்டிராவின் தலைநகருமுமான மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் "சுதேசி" வங்கியாக இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 3 ஒன்றியப் பகுதிகளில் 4650க்கும் மேற்ப்பட்ட கிளைகளையும் 4 விரிவுபடுத்தும் மையங்களையும் மற்றும் 4800க்கும் மேற்பட்ட தானியங்கு பணம் வழங்கும் இயந்திரங்கள், 34,500 பணியாளர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள 105 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விவரங்களை பார்ப்போம்.

மொத்த காலியிடங்கள்: 105

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  

பணி: Information Technology/I - 26
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42020

பணி: Security officer / III - 01
சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51490

பணி: Security Officer /I - 09
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42020

பணி: Risk Manager / III - 06
சம்பளம்: மாதம் ரூ.42020 - 51,490

பணி: Risk Manager/II - 06
பணி: Financial Analyst/II - 10
பணி: Economist/II - 01
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

பணி: CDO /Chief Data Scientist / IV - 01
சம்பளம்: மாதம் ரூ.50,030 - 59,170

பணி: Data Analyst / III - 03
பணி: Analytics-Senior Manager/III - 02
பணி: Data Engineer /III - 02
பணி: Data Architect / III - 02
பணி: Credit officers / III - 05
சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 21 முதல் 45 வயதுவரை உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் தகவல் கட்டணமாக ரூ.50 மட்டும் செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தகவல் கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்தனை அட்டைகளைக் கொண்டு ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.centralbankofindia.co.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.centralbankofindia.co.in/pdf/DETAILED-REVISEDADVERTISEMENT-SPLST.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.11.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com