சுடச்சுட

  

  ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் சம்பளத்தில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்? 

  Published on : 09th September 2019 02:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tancem


  தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 40 நிறுவன செயலாளர், மேலாளர், தொழில்நுட்ப நிர்வாகி, சிசிஆர் ஆப்ரேட்டர்கள், எக்ஸ்-ரே ஆய்வாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  மொத்த காலியிடங்கள்: 40 

  பணியிடம்: தமிழ்நாடு

  பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

  பணி: Company Secretary - 01
  தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஏசிஎஸ் முடித்து ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் நிறுவனத்தின் செயலாளராக 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சிஏ, ஐசிடபுள்யூஏ முடித்திருந்தால் கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும். 

  பணி: Manager (Chemical)- Production -  01
  தகுதி: பொறியியல் துறையில் வேதியியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்.எஸ்சி முடித்து நவீன சிமெண்ட் ஆலையில் 18 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும், அதில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் துறைத் தலைவராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
  வயதுவரம்பு: மேற்கண்ட 3 பணிகளுக்கும் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  சம்பளம்: மாதம் ரூ.61,900 - 1,96,700 வழங்கப்படும்.

  பணி: Technical Executive (Mechanical) - 11
  தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் பட்டம் பெற்று செங்குத்து உருளை கொண்ட ஒரு சிமெண்ட் ஆலையில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
  சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,14,800

  பணி: CCR Operators - 16 
  தகுதி: பொறியியல் துறையில் வேதியியல் பிரிவில் பி.இ, பி.டெக் அல்லது டிப்ளமோ, அல்லது வேதியியல் துறையில் பி.எஸ்சி அல்லது எம்.எஸ்சி முடித்து 3 ஆண்டு நவீன சிமெண்ட ஆலைகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

  பணி: X- Ray Analyst - 06
  பணி: Shift Chemist - 05

  தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி அல்லது எம்.எஸ்சி முடித்து நவீன சிமெண்ட் ஆலையில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
  சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,12800
  வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

  விண்ணப்பிக்கும் முறை: www.tancem.com  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

  விண்ணப்பத்தின் உறையின் மீது விண்ணப்பிக்கும் பணிக்கான பெயரை குறிப்பிடவும்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Senior Manager/Dy. Collector
  Tamil Nadu Cements Corporation Limited,
  LLA Buildings, 2nd Floor,No.735, Anna Salai,
  Chennai 600 002.

  விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடங்கும் தேதி: 08.09.2019

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tancem.com/wp-content/uploads/2019/09/HRMS-52-7-9-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.10.2019

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai