வேலைவாய்ப்பு அறிவிப்பு: சுரங்கங்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் வேலை

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் செயல்பட்டுவரும் சுரங்கங்களைப் பற்றிய கல்வி மற்றும் ஆய்வு நிறுவனமான இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் (ஐ.எஸ்.எம்.) நிறுவனம் ஆசிரியர்
வேலைவாய்ப்பு அறிவிப்பு: சுரங்கங்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் வேலை


ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் செயல்பட்டுவரும் சுரங்கங்களைப் பற்றிய கல்வி மற்றும் ஆய்வு நிறுவனமான இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் (ஐ.எஸ்.எம்.) நிறுவனம் ஆசிரியர் அல்லாத பணியிடங்களான துணை பதிவாளர், உதவி பதிவாளர், இளநிலை உதவியாளர் மற்றும் இளநிலை டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1926 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு இந்த கல்வி நிறுவனம் 4 ஆண்டு சுரங்க தொழில்நுட்ப பட்டப்படிப்புகள், முதுநிலை படிப்புகள், 5 ஆண்டுகள் கொண்ட இன்டகரேட்டடு படிப்புகள், இரட்டை பட்டப்படிப்புகள் மற்றும் ஆய்வு படிப்புகளையும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மொத்த காலியிடங்கள்: 191

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Deputy Registrar  - 03 
பணி: Assistant Registrar - 08 

தகுதி: சட்டம், மேலாண்மை, சி.ஏ. சி.எஸ்., ஐ.சி.டபுள்யு.ஏ. படித்தவர்கள் டெபுடி ரிஜிஸ்திரார் பணிக்கும், மேலாண்மை நிதி சார்ந்த முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000

பணி: Junior Assistant  - 74
தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பும், தட்டச்சுத்திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Junior Technician - 106
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1.Chemistry - 02 
2.Chemical - 08
3.Civil - 07
4.Electrical - 15
5.Electronics - 19 
6.Mechanical - 40
7.Computers - 12 
8.Mining - 03 

தகுதி: சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களும்,   ஐடிஐ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.iitism.ac.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iitism.ac.in//uploads/news_events/admin/23-08-2019-08:08:13_notices.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2019

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 11.11.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com