Enable Javscript for better performance
அசைவ, சைவ உணவு சமைக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்- Dinamani

சுடச்சுட

    

    அசைவ, சைவ உணவு சமைக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை: உடனே விண்ணப்பிக்கவும் 

    Published on : 15th September 2019 04:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tngov


    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரக்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    பணி: சமையலர் (ஆண்) 
    காலியிடங்கள்: 13

    பணி: சமையலர் (பெண்)
    காலியிடங்கள்: 19

    சம்பளம்: மாதம் ரூ.15,700

    வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

    தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவுகள் தரமானதாகவும், சுவையானதாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

    தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்கும் முறை: www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.09.2019

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai