வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகையைப் பெற விண்ணப்பிப்பது எப்படி?

படித்துவிட்டு வேலைவாய்ப்பில்லாமல் வேலையற்று இருக்கும் இளைஞர்களுக்கான உதவித் தொகையைப் பெற விரும்புவோர் மாவட்ட
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகையைப் பெற விண்ணப்பிப்பது எப்படி?



படித்துவிட்டு வேலைவாய்ப்பில்லாமல் வேலையற்று இருக்கும் இளைஞர்களுக்கான உதவித் தொகையைப் பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தமிழக அரசால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை, வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன? 
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள், பிளஸ் டூ, டிப்ளமோ, இளங்கலை முடித்து, தனியார், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 40 வயதுக்குள்பட்டவராகவும் (ஆதி திராவிடர் 45 வயதுக்கு மிகாமல்) இருக்க வேண்டும். 

ஆண்டு வருமானம்: குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் (மாதம் ரூ.6,000) இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித் தகுதி மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு இல்லை. கடந்த 25.07.2019 முதல் அரசாணை நிலை எண்.127ன்படி உயர்த்தப்பட்டுள்ளது.

அணுக வேண்டிய முகவரி: பத்தாம் வகுப்புக்கு மேல் படித்தோர், சென்னை -4 சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். 

இதேபோல் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெறாதவர்கள் சாந்தோம் தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், கிண்டி மகளிர் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளும் உதவித் தொகைக்கான விண்ணப்பத்தினை பெறலாம். 

மேலும் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்ற பயனாளிகள் சுய உறுதி மொழி ஆவணம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண்ஸ வங்கி புத்தக நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com