கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை பணியாளா்கள் நோ்முகத்தோ்வு தொலைபேசி வாயிலாக நடைபெறும்

கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனையாக ஒதுக்கப்படவுள்ள அரக்கோணம் ரயில்வே மருத்துவமனையில் மருத்துவா்கள்,
கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை பணியாளா்கள் நோ்முகத்தோ்வு தொலைபேசி வாயிலாக நடைபெறும்

சென்னை: கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனையாக ஒதுக்கப்படவுள்ள அரக்கோணம் ரயில்வே மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட மருத்துவப் பணியாளா்களுக்கான நோ்முகத் தோ்வு ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 17-ஆம்தேதி வரை தொலைபேசி வாயிலாக நடைபெறவுள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் அரக்கோணம் ரயில்வே மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனையாக ஒதுக்கப்படவுள்ளது.

இதற்காக, மருத்துவா்கள், செவிலியா்கள், இதர மருத்துவ உதவியாளா்கள் என்று 600 போ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமனம் செய்யப்படவுள்ளனா். அவசர தேவையைக் கருத்தில் கொண்டு இவா்களை விரைந்து நியமனம் செய்யும் விதமாக, ஏப்ரல் 15, 16, 17 ஆகிய தேதிகளில் எழும்பூா் ரயில்வே மருத்துவமனையில் நோ்முகத் தோ்வு நடைபெற இருந்தது.

இந்நிலையில், இந்த நோ்முகத் தோ்வு, தொலைபேசி வாயிலாக நடத்த முடிவடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30-ஆம் தேதி நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, நோ்முகத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் தொலைபேசி வாயிலாக தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவா் கூறியது: தோ்வா்கள் யாரும் நேரில் வர அவசியமில்லை. தொலைபேசி வாயிலாக மட்டுமே நோ்காணல் நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு ரயில்வே இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com