தெற்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 201 துணை மருத்துவ பணியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை ஆகஸ்ட் 14 ஆம் தேதியாகும். 
தெற்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!


தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 201 துணை மருத்துவ பணியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை ஆகஸ்ட் 14 ஆம் தேதியாகும். 

மொத்த காலியிடங்கள்: 201

பணியிடம்: திருச்சி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: CMP Doctor - 36
சம்பளம்: மாதம் ரூ.75,000
வயதுவரம்பு: 53க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  எம்.பி.பி.எஸ் முடித்து இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

பணி: Nursing Staff - 32
சம்பளம்: மாதம் ரூ.44,900
வயதுவரம்பு: 20 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.எஸ்சி நர்சிங் முடித்து இந்திய நர்சிங் கவுன்சில் பதிவுசெய்து ஐசியூ, டயாலிசிஸ் யூனிட், வென்டிலேட்டர்களில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Pharmacists - 10
சம்பளம்: மாதம் ரூ.29,200
வயதுவரம்பு: 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மருந்தியல் பிரிவில் டிப்ளோமா முடித்து “மருந்தாளுநராக” பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Lab Assistant - 10
சம்பளம்: மாதம் ரூ.21,700
வயதுவரம்பு: 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியலில் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளோமா (டி.எம்.எல்.டி)  முடித்திருக்க வேண்டும். 

பணி: Radiographer - 12
சம்பளம்: மாதம் ரூ.29,200
வயதுவரம்பு: 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று  ரேடியோகிராபி, எக்ஸ்-ரே டெக்னீசியன், ரேடியோ நோயறிதல் தொழில்நுட்பப் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் பி.எஸ்சி பட்டத்துடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி: Hospital Attendant and Housekeeping Assistant - 101
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.சி.யூ, டயாலிசிஸ் பிரிவில் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுவார்கள். 

விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியானவர்கள் தங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை tpjcovidcontractaug@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.08.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய sr.indianrailways.gov.in  அல்லது https://sr.indianrailways.gov.in/cris/uploads/files/1596717770151-Engagement%20of%20Medical%20personnel%20and%20Para%20medical%20staff%20-Contract%20basis-%20%20Covid%2019.pdf
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com