விண்ணப்பித்துவிட்டீர்களா..? சித்த மருத்துவ கவுன்சிலில் பார்மசிஸ்ட், செவிலியர் வேலை

விண்ணப்பித்துவிட்டீர்களா..? சித்த மருத்துவ கவுன்சிலில் பார்மசிஸ்ட், செவிலியர் வேலை

சென்னையில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் நிரப்பப்பட உள்ள பார்மசிஸ்ட், செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்


சென்னையில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் நிரப்பப்பட உள்ள பார்மசிஸ்ட், செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 02/2020
பணி: Research Officer (Siddha)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சித்த மருத்துவ பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Siddha Pharmacist
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல், கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்து இரண்டு ஆண்டு சித்தா பார்மசி படிப்பை முடித்திருக்க வேண்டும். 

பணி: Therapist (Siddha)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சித்தா நர்சிங் திரபி பாடத்தில் டிப்ளமோ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. கட்டணத்தை Central Council for Research in Siddha, Chennai என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். டி.டி பின்புறம் பெயர், விளம்பர எண், விண்ணப்பிக்கும் பணியின் பெயர் குறிப்பிட வேண்டும்.  மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டாம். 

விண்ணப்பிக்கும் முறை:  www.siddhacouncil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Director General, Central Council for Research in Siddha, Arumbakkam, Chennai - 600 106.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.01.2021

மேலும் விவரங்கள் அறிய http://siddhacouncil.com/ccrs/wp-content/uploads/2020/11/Advt.-No.-22020-AWC-posts.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com