வேலை... வேலை... வேலை... அஞ்சல் துறையில் இளநிலை கணக்காளர் வேலை

வேலை... வேலை... வேலை... அஞ்சல் துறையில் இளநிலை கணக்காளர் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கர்நாடகம் அஞ்சல் வட்டத்தில் உள்ள காலியாக உள்ள 46 இளநிலை கணக்காளர், அஞ்சல் உதவியாளர் போன்ற

 

இந்திய அஞ்சல் துறையின் கர்நாடகம் அஞ்சல் வட்டத்தில் உள்ள காலியாக உள்ள 46 இளநிலை கணக்காளர், அஞ்சல் உதவியாளர் போன்ற பணியிடங்களை விளையாட்டு வீரர்களைக் கொண்டு நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 46

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Accountant (JA) in Postal Accounts Office - 02
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: Postal Assistant (PA) in Post Offices or Administrative Offices -11
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: Sorting Assistant (SA)in Railway Mal Offices - 04
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: Postman (PM) in Post Offices - 27
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், இளங்கலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். குறைந்தது 10 ஆம் வகுப்பு வரையில் கன்னட மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
 
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதிகள் அடிப்படையில் தேர்வு பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்தணை அட்டைகள் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் செலுத்த வேண்டாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.karnatakapost.gov.in என்ற அதிகார்பூர்வ வலைத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 

முகவரி: The Assistant Director ( R&E)
0/0 Chief Postmaster General
Karnataka Circle
Bengaluru-560001

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.karnatakapost.gov.in/download/Karnataka_Circle_Sports_Notification_dtd_17-01-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com