மத்திய பாதுகாப்பு படையில் தலைமை காவலர் வேலை

சிஆர்பிஎஃப் என அழைக்கப்படும்  மத்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு
மத்திய பாதுகாப்பு படையில் தலைமை காவலர் வேலை

சிஆர்பிஎஃப் என அழைக்கப்படும்  மத்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் மார்ச் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: மத்திய பாதுகாப்பு படை (Central Reserve Police Force)

பணியிடம்:  இந்தியா முழுவதும்

மொத்த காலியிடங்கள்: 1412 (ஆண்-1331, பெண்-81)

பணி:  தலைமை காவலர் (Head Constable (General Duty))

சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று குறைந்தது 4 ஆண்டுகள் பாதுகாப்பு படையில் பணிபுரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப முறை: www.crpf.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_189_1_Notification_of_HCGD-LDCE_EXAMINATION_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com