Enable Javscript for better performance
ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் புள்ளியியல் துறையில் வேலை வேண்டுமா?- Dinamani

சுடச்சுட

    

    ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் புள்ளியியல் துறையில் வேலை வேண்டுமா?

    Published on : 11th February 2020 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Central_Govt


    மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    பணி: Senior Consultant - 03
    சம்பளம்: மாதம் ரூ.1,00,000

    பணி: Junior Consultant - 25
    சம்பளம்: மாதம் ரூ.70,000

    பணி: Executive Assistant - 20
    சம்பளம்: மாதம் ரூ.35,000

    தகுதி: புள்ளியியல், கணிதம், பொருளாதரம் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

    வயதுவரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம் அகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

    விண்ணப்பிக்கும் முறை: www.mospi.nic.in என்ற அதிகார்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இமைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Director General (Admn), Maharishi Valmikimarg, New Delhi - 110032

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.02.2020

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai