ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் புள்ளியியல் துறையில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் புள்ளியியல் துறையில் வேலை வேண்டுமா?


மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Senior Consultant - 03
சம்பளம்: மாதம் ரூ.1,00,000

பணி: Junior Consultant - 25
சம்பளம்: மாதம் ரூ.70,000

பணி: Executive Assistant - 20
சம்பளம்: மாதம் ரூ.35,000

தகுதி: புள்ளியியல், கணிதம், பொருளாதரம் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம் அகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.mospi.nic.in என்ற அதிகார்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இமைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Director General (Admn), Maharishi Valmikimarg, New Delhi - 110032

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.02.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com