பட்டதாரிகளுக்கு சமூகநல அதிகாரிப் பணி வேண்டுமா?

புதுச்சேரியில் உள்ள சமூக நல இயக்குநரகத்தில் காலியாக உள்ள சமூகநல அதிகாரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு
பட்டதாரிகளுக்கு சமூகநல அதிகாரிப் பணி வேண்டுமா?


புதுச்சேரியில் உள்ள சமூக நல இயக்குநரகத்தில் காலியாக உள்ள சமூகநல அதிகாரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Welfare Officer

காலியிடங்கள்: 48

சம்பளம்:  மாதம் ரூ.20,000

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: சமூகவியல், சமூக பணி, உளவியல், மனை அறிவியலுடன் ஊட்டச்சத்து மற்றும் குழந்தை வளர்ச்சி போன்ற பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் தகுதி தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து இணைத்து கூழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கவும். அஞ்சல் உறையின் மீது "Application for the Engagement of Welfare Officer on contract Basis"என்று குறிப்பிடவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Directorate of Social Welfare, Saradhambal Nagar, Ellaipillaichavady, Puducherry - 605 005.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.py.gov.in என்ற அதிரகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

பூர்ச்சி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com