விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழக மின்வாரியத்தில் உதவிப் பொறியாளா் பணி

தமிழக மின்வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 600 உதவிப் பொறியாளா்கள் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு மாா்ச்
விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழக மின்வாரியத்தில் உதவிப் பொறியாளா் பணி


தமிழக மின்வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 600 உதவிப் பொறியாளா்கள் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு மாா்ச் 16-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையுவும். 

மொத்த காலியிடங்கள்: 600

பணி: உதவிப் பொறியாளா் (Assistant Engineer (AE))

துறைவாரியான காலியிடங்கள்: 
1. மின்னியல் (Electrical) - 400
2. இயந்திரவியல் (Mechanical) - 125
3. கட்டடவியல் (Civil) - 75 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரா்களும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களும், ஆள்குறைப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்ட அரசுத் துறையில் பணியாற்றி வேலை இழந்தவா்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், எஸ்சி, எஸ்டி, விதவைப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சமாக 35க்குள்ளும், எம்பிசி, டிசி, பிசிஓ, பிசிஎம் பிரிவினர் 32க்குள்ளும், மற்ற பிரிவினர் 30க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.39,800 - 1,26,500 

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்:  ஓசி, பிசிஓ, பிசிஎம், எம்பிசி மற்றும் டிசி பிரிவினர் ரூ.1000, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 
 
விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற மின்வாரிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

எழுத்துத் தோ்வு, கணினி அடிப்படையிலான தோ்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியன குறித்து www.tangedco.gov.in எனும் வெளியிடப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tangedco.gov.in/linkpdf/AE_NOTIFICATION_%20FINAL_PDF.pdf ZVdJ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2020 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com