ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்..?

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள கிரேடு 'ஏ'  மற்றும் கிரேடு 'பி' பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்..?


இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள கிரேடு 'ஏ'  மற்றும் கிரேடு 'பி' பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்:  17

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Legal Officer in Grade ‘B’ - 01
பணி:  Manager (Technical – Civil) - 01
பணி:  Assistant Manager (Rajbhasha) - 06
பணி: Assistant Manager (Protocol & Security) - 04
பணி: Library Professionals (Assistant Librarian) in Grade ‘A’ - 01

தகுதி: சட்டத்துறையில் பிஎல் பட்டம் பெற்று  2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள், பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், இந்தியில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், இந்தியாவின் முப்படைகளில் ஏதாவதொன்றில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்  அதிகாரியாக பணி அனுபவம் பெற்றவர்கள், கலை, அறிவியல், வணிகம் பிரிவில் பட்டம் பெற்று நூலக பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.12.2019 தேதியின்படி 21 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ. கிரேடு 'ஏ' பணியிடங்களுக்கு மாதம் ரூ.28,150 - 55,600, கிரேடு 'பி' பணியிடங்களுக்கு 35,150 - 62,400 வழங்கப்படுகிறது. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கல் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை:  https://opportunities.rbi.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3811 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com