தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலை: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஓர்அறிய வாய்ப்பாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 500
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலை: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.


அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஓர்அறிய வாய்ப்பாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 500 இளநிலை உதவியாளர் (கணக்கு) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்படுகின்றன. 

நிறுவனம்: தமிழ்நாடு மின்சார வாரியம்

மொத்த காலியிடங்கள்: 500

பணி இடம்: மிழ்நாடு முழுவதும்

பணி: Junior Assistant (Accounts ) - 500    

சம்பளம்: மாதம் ரூ. 19,500 - ரூ.62,000

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: வணகவியல் பிரிவில் பி.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்க்கள். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பின்னர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக் கட்டணம்: பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.03.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com