விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துவிட்டீர்களா..?  இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை


வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  வங்கி பணிக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திகொண்டு பயன்பெறவும். 

மொத்த காலியிடங்கள்: 926

பணி: Assistant
சம்பளம்: மாதம் ரூ. 13,150 - 34990

கல்வித்​ தகுதி: குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்கம் வேண்டும். 

வயது வரம்பு: 01.12.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 20 - 28 வயதிற்குள் வேண்டும்.

மாநகரங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 
அகமதாபாத் - 19
பெங்களூரு - 21
போபால் - 42
புவனேஸ்வர் - 28
சண்டிகர் - 35
சென்னை- 67
கவுகாத்தி- 55
ஹைதராபாத் - 25
ஜெய்ப்பூர் - 37
ஜம்மூ -13
கான்பூர் மற்றும் லக்னோ     - 63
கொல்கத்தா - 11
மும்பை    - 419
நாக்பூர்    - 13
புதுதில்லி - 34
பாட்னா    - 24
திருவனந்தபுரம் மற்றும் கொச்சி - 20

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு, மொழித்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: https://opportunities.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTRPS231220191CA99C7B271B4474ABB2A6813C5B3850.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com