கால்நடை பராமரிப்புத்துறை வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

திருவண்ணாமலை  மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர். ஓட்டுநர் பணியிடங்களுக்கான
கால்நடை பராமரிப்புத்துறை வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?


திருவண்ணாமலை  மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர். ஓட்டுநர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: ஓட்டுநர் - 02 
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுபிக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பணி: ஆய்வக உதவியாளர் -  01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 15,900 - 50,400

பணி: அலுவலக உதவியாளர் - 05
தகுதி: 8-ஆம் தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

வயதுவரம்பு: பொதுப்பிரிவினர் 30க்குள்ளும், எம்பிசி, பிசி பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்35க்குள்ளும் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் https://tiruvannamalai.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையைான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, தண்டராம்பட்டு ரோடு, கால்நடை பெருமருத்துவமனை வளாகம், திருவண்ணாமலை என்ற அஞ்சல் முகவரிக்கோ அல்லது நேரிலோ ஒப்படைக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை மேல் உறையின் மீது பெரிய எழுத்துகளில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/01/2020012332.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.02.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com