பெல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்கவும்

கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள புராஜெக்ட்
பெல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்கவும்

கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள புராஜெக்ட் பொறியாளர்-I பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: புராஜெக்ட் பொறியாளர்(Project Engineer-I)

காலியிடங்கள்: 30

துறைவாரியான காலியிடங்கள்: 
மெக்கானிக்கல் - 10, சிவில் - 14, எலக்ட்ரிக்கல் - 06 

சம்பளம்: மாதம் ரூ. 35,000 - 50,000

வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல்,  எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற  பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகழ்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

Manager(HR/MR&MS), Bharat Electronics Ltd., Jalahalli PO, Bangalore 560013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற http://bel-india.in/Documentviews.aspx?fileName=Advertisement-07-01-20.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com