விண்ணப்பித்துவிட்டீர்களா..? சீனியர் அசிஸ்டன்ட் இன்ஜினியர் வேலை

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் காஜியாபாத் கிளையில் காலியாக உள்ள  ‘சீனியர் அசிஸ்டன்ட் இன்ஜினியர்’
விண்ணப்பித்துவிட்டீர்களா..? சீனியர் அசிஸ்டன்ட் இன்ஜினியர் வேலை


பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் காஜியாபாத் கிளையில் காலியாக உள்ள  ‘சீனியர் அசிஸ்டன்ட் இன்ஜினியர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
  
பணி:
SENIOR ASSISTANT ENGINEER

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ. 30,000 -1,20,000 + அனுமதிக்கக்கூடிய பிற சலுகைகள்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் போன்ற துறைகளில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: இந்திய முப்படைகளில் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன்  தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
DGM(HR) ,Bharat Electronics Limited Ghaziabad , P.O. Bharat Nagar, Sahibabad, Ghaziabad(U.P.)-201010, 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.in/Documentviews.aspx?fileName=PS-AD-detail-Web-31-12-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.02.2020
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com