சாலை ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? பிப்.22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
By | Published On : 27th January 2020 05:47 PM | Last Updated : 13th October 2020 12:44 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள சாலை ஆய்வாளா் பணியிடங்களுக்கு பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியக உள்ள சாலை ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சாலை ஆய்வாளா் பணி நியமனத்துக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், காலிப்பணியிடங்களின் விவரம், இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை https://cdn.s3waas.gov.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சிப்பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவா் (வளா்ச்சிப் பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், (அறை எண்: 310), பல்லடம் ரோடு, திருப்பூா் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ வரும் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.