தேசிய தகவல் தொடர்பு மையத்தில் வேலை வேண்டுமா?

கொல்கத்தாவில் உள்ள தேசிய தகவல் தொடர்பு மையத்தில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர் மற்றும் டெக்னீசியன் உதவியாளர் பணியிடங்களுக்கான
தேசிய தகவல் தொடர்பு மையத்தில் வேலை வேண்டுமா?


கொல்கத்தாவில் உள்ள தேசிய தகவல் தொடர்பு மையத்தில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர் மற்றும் டெக்னீசியன் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Scientist-B
காலியிடங்கள்: 288
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientific, Technical Assistant
காலியிடங்கள்: 207
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: எலக்ட்ரானிக்ஸ், ஐடி,இசிஇ, டெலி கம்யூனிகேஷன்ஸ், கணினி அறிவியல், மென்பொருள் சிஸ்டம் போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி அல்லது பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. இதனை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.calicut.nielit.in/nic அல்லது https://www.calicut.nielit.in/nic/documentformats/DetailedAdvertisement.pdf என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com