கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,051 சத்துணவு அமைப்பாளர் வேலை
By | Published On : 01st October 2020 05:12 PM | Last Updated : 01st October 2020 05:12 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,051 சத்துணவு அமைப்பாளர் வேலை
கிருஷ்ணகிரி மாவட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1051
பணி: சத்துணவு அமைப்பாளர் - 342
பணி: சமையலர் - 64
பணி: சமையல் உதவியாளர் - 645
தகுதி: ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 - 40க்குள்ளும், பழங்குடியினர் 18 - 40க்குள்ளும், ஆதரவற்ற / விதவை விண்ணப்பதாரர்கள் 20- 40க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் குறைந்தபட்சம் ரூ. 7,700 முதல் அதிகபட்சம் ரூ.24,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியான மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ தொடர்புசைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்"
1. பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்
2. கல்வித்தகுதி சான்றி நகல்
3. மதிப்பெண் சான்று நகல்
4. சாதி சான்று நகல்
5. ஆதார் அட்டை நகல்
6. விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களாக இருப்பின் உரிய அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் நகல்
7. மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்: விண்ணப்ப படிவங்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இணையதளமான www.krishnagiri.nic.in என்ற முகவரியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.10.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://krishnagiri.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.