8,ஐடிஐ படித்தவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவன பிஇசிஐஎல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1500 Skilled and Unskilled Manpower பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
8,ஐடிஐ படித்தவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை


பொதுத்துறை நிறுவன பிஇசிஐஎல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1500 Skilled and Unskilled Manpower பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Skilled and Unskilled Manpower

காலியிடங்கள்: 1500

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical, Wireman தொழிற்பிரிவுகளில் ஐடிஐ முத்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ் தொழிற்பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தது 1 ஆண்டு Electrician பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐடிஐ படிப்பில் 80 சதவீகிதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிஇசிஐஎல் நிறுவனத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும், அதில் வெற்றி பெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

பதிவு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை Broadcast Engineering Consultants India Limited என்ற பெயருக்கு புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 

டி.டி எடுக்க வேண்டிய வங்கி கணக்கு எண் விவரம்: 
Name of the Bank: Corporation Bank, 
Account No. 510341000702746,
IFSC Code: CORP0000371
Branch Address: Corporation Bank, CGO Complex, Lodhi Road, New Delhi - 110003

விண்ணப்பிக்கும் முறை: www.beciljobs.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த பின்னர் விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டண டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.10.2020 

மேலும் விவரங்கள் அறிய www.beciljobs.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com