விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிளஸ் 2, பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 44 திட்ட உதவியாளர் (கணினி, தொழில்நுட்பம்), பண்ணை மேலாளர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சு மற்றும் ஓட்டுநர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிளஸ் 2, பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 44 திட்ட உதவியாளர் (கணினி, தொழில்நுட்பம்), பண்ணை மேலாளர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சு மற்றும் ஓட்டுநர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

மொத்த காலியிடங்கள்: 44

பணி: Programme Assistant (Computer) - 02
பணி: Programme Assistant (Technical) - 04
பணி: Farm Manager - 04

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500

பணி: Junior Assistant cum Typist - 14
பணி: Driver - 20
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

தகுதி:  8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன உரிமம் மற்றும் அனுபவம், பிளஸ் 2 தேர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் முதுநிலை அல்லது இளநிலை தேர்ச்சி பெற்றவர்கள்,  கணினி அறிவியல் பிரிவில் ,பி.எஸ்சி., பிசிஏ., வேளாண்மை, கால்நடை அறிவியல், விலங்கு அறிவியல், தோட்டக்கலை, வனவியல் போன்ற பிரிவுகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  முழு விவரத்தை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு:  01.07.2020 தேதியின்படி  கணக்கிடப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவினர் ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnausms.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தகுதி சான்றிதழ், பணி அனுபவம் போன்ற தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சான்றொப்பம் பெறப்பட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, Tamilnadu Agricultural University, Coimbatore - 641 003

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnausms.in/Design_index/pdf/ICAR-KVK-POSTS-2020-NOTIFICATION.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 13.11.2020

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com