விண்ணப்பித்துவிட்டீர்களா..? CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் வேலை

CSIR-CECRI, சென்னை மண்டல மையத்தில் நிரப்பப்பட உள்ள Project Associate பணியிடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் வேலை


CSIR-CECRI, சென்னை மண்டல மையத்தில் நிரப்பப்பட உள்ள Project Associate பணியிடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 

நிறுவனம்: CSIR

பணி: Project Associate

காலியிடங்கள்:  08

வயது வரம்பு :06.09.2020 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இஇஇ, ஆட்டோமொபைல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் வேதியியல், இயற்பியல், மெட்ரியல் அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை + எச்ஆர்ஏ

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து recruitment@csircms.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com