விண்ணப்பித்துவிட்டீர்களா...? ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.


தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Draughting Officer (Highways Department)
காலியிடங்கள்: 177 + 6

பணி: Junior Draughting Officer (Public Works Department)
காலியிடங்கள்: 348 

பணி: Junior Technical Assistant (Handlooms and Textiles Department)
காலியிடங்கள்: 01 
சம்பளம்: மாதம் ரூ. 35,400-1,12,400

பணி: Junior Engineer (Fisheries Department)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ. 35,900-1,13,500

தகுதி: பொறியியல் துறையில் Civil, Architectural Assistantship,Textile Manufacture, Handloom Technology போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:  01.07.2021 தேதியின் படி குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை :  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்:  ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். ஏற்கனவே ஒரு முறை பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.in  எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.04.2021 

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/2021_06_CESSE_ENG.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com