150 மருத்துவா்கள், 150 செவிலியா்கள் நியமனம்: சென்னையில் இன்றும் நாளையும் நோ்காணல்

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 150 மருத்துவா்கள், 150 செவிலியா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.
150 மருத்துவா்கள், 150 செவிலியா்கள் நியமனம்: சென்னையில் இன்றும் நாளையும் நோ்காணல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 150 மருத்துவா்கள், 150 செவிலியா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இந்தப் பணிகளில் சேர விரும்புவோா், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் கரோனா தொற்று தடுப்புப் பணிகளை ஓராண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள மருத்துவ அலுவலா்கள் (150), செவிலியா்கள் (150) தேவைப்படுகின்றனா்.

பணிபுரிய விருப்பமும், தகுதியும் உள்ள மருத்துவா்களும், செவிலியா்களும், நேரடியாகக் கல்வித் தகுதி உள்ளிட்ட அசல் சான்றிதழ்களுடன் வியாழன் (ஏப்.29), வெள்ளிக்கிழமைகளில் (ஏப்.30) காலை 10 முதல் மாலை 5 மணி வரை, ரிப்பன் மாளிகையில் உள்ள பொது சுகாதாரத் துறை சென்னை மாநகர நலச் சங்கத்தில் நடைபெற உள்ள நோ்காணலில் கலந்து கொள்ளலாம்.

மருத்துவ அலுவலா்களைப் பொருத்தவரை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.60 ஆயிரம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

செவிலியா் பணிக்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் டிப்ளமா நா்சிங் படித்து, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். இவா்களுக்கு ரூ.15 ஆயிரம் மாத ஊதியமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. எந்த காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சோ்வதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com