இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் குரூப் 'பி' மற்றும் 'சி' வேலை

உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு குரூப் பி மற்றும் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் குரூப் 'பி' மற்றும் 'சி' வேலை


 
உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு குரூப் பி மற்றும் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Technical Superintendent (Group B) - 01
பணி: Assistant Security (Group B) - 01
பணி: Coach Group B - 06
பணி: Junior Superintendent (Group B) - 31
பணி: Junior Superintendent (Group B) - 01
வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12, 400

பணி: Pharmacist (Group C) - 01
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300

பணி: Junior Lab Assistant (Group C) - 52
பணி: Junior Assistant - 39
பணி: Driver Grade II - 01

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் மற்றும் கணி அறிவு மற்றும் பணி அனுபவம், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், கணிதம் பிரிவில் முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஇ, பி.டெக், எம்சிஏ முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சியுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.iitr.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.05.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.iitr.ac.in/administration/uploads/File/recruitment/2021/Adv_no_2021.01_Gp_BC.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com